சமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி

சமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி

சமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி
Published on

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

சமூக வலைதளங்களோடு ஆதார் எண்ணை இணைக்க கோரி அஸ்வினி என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com