\
ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு 
Published on

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. முன் ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.  விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால் அடுத்ததாக அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பு உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com