தமிழ்நாடு
திருச்சுழி தேர்தலை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
திருச்சுழி தேர்தலை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
திருச்சுழி தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சுழி தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக்கூறி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் திருச்சுழி தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது செல்லும் எனத் தெரிவித்துள்ளது.