\
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை குத்தகை முறையில் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com