தமிழ்நாடு
அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவு
அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகார வழக்கில் முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி செய்த நிலையில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.