தமிழ்நாடு
பேரறிவாளனின் பரோல் காலம் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு
பேரறிவாளனின் பரோல் காலம் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 45 நாட்கள் பரோல் வழங்கியது.
இந்நிலையில் அந்தப் பரோல் காலமானது இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது உரிய பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்திய வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.