\
தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை
Published on

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு மாநில அரசு உதவ வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவோதயா பள்ளிகளைத் திறப்பது இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது என தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. 

நவோதயா பள்ளிகளுக்குத் தேவையான 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை கையகப்படுத்துவது மிகுந்த சிரமமானதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைகால தடை விதித்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த குமாரி மகாசபா என்ற மனுதாரருக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com