ஈஷாவில் உள்ள இரண்டு பெண்கள் கட்டாயத்தின்பேரில் அங்கே இருக்க வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கில், சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாங்கள் இருவரும் தங்கியிருந்ததாக அப்பெண்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அதுதொடர்பான விசாரணையை முடித்துகொள்ள உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஈஷா மீதான மற்ற வழக்குகளை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக ஈஷா மையத்திற்குச் சென்று காணாமல்போன பலரை காவல் துறையினரால் கண்டறியமுடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அதில், மேலும் "ஈஷா மையத்திற்குச் சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இதில், பலரை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை. ஈஷா மையத்திற்குள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா மையத்திற்குள் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது.
ஈஷா மையத்தில் உள்ள 533 பேரிடம் உணவு, பாதுகாப்பு நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு, ஈஷா மையத்தில் முறையாக செயல்பாட்டில் இல்லை” என்று தமிழக காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிய விரிவான தகவல்களை, இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...