முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு
Published on


ஜெயலலிதாவைப் போன்றே தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நீதித்துறையுடன் சுமூக உறவைப் பேணுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார். 

உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய கட்டடம் கட்டப்பட்ட 125ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், ஜெயலலிதாவைப் போன்றே தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நீதித்துறையுடன் சுமூக உறவைப் பேணுகிறார். இது தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘நீதித்துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக ஜெயலலிதாவின் அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உறுதி செய்யும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் நமது நடவடிக்கைகள் இனித் தொடர்ந்து அமையவேண்டும்’எனக் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com