\
“கோடநாடு வழக்கு; மேல்விசாரணைக்கு தடையில்லை” - உச்ச நீதிமன்றம்

“கோடநாடு வழக்கு; மேல்விசாரணைக்கு தடையில்லை” - உச்ச நீதிமன்றம்

“கோடநாடு வழக்கு; மேல்விசாரணைக்கு தடையில்லை” - உச்ச நீதிமன்றம்
Published on

கோடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு தடை கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோடநாடு வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடிய அனுபவ் ரவி என்பவர் காவல்துறையினரின் மேல்விசாரணைக்கு தடைவிதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்விசாரணை நடத்திக் கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடியாமல்தான் செல்லும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கோடநாடு வழக்கின் மேல்விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஏற்கெனவே அனுபவ் ரவியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றமும் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் போலீசார் மேல்விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com