சொகுசு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சொகுசு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. தண்டனையிலிருந்து விடுவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் நடராஜன் தொடர்ந்து வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் விசாணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் தொடர்புடைய நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பிணைத் தொகையாக ரூ.25 லட்சம் செலுத்த நடராஜனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.