தமிழ்நாடு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை கொலிஜியம் குழு தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீழமை நிதிமன்றங்களில் பணியாற்றி வரும் 6 நீதிபதிகளின் பெயர்களை, உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் குழு அறிவித்துள்ளது. முன்னதாக, மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் 10 பேர் உள்ளிட்ட 21 பேரின் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யலாம் என கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017 ஜனவரியில் பட்டியல் அனுப்பப்பட்டது. தற்போது 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 பேர்களின் நியமனம் குறித்த முடிவுகள் வரும் மாதங்களில் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.