உச்சநீதிமன்றம், மேகதாது
உச்சநீதிமன்றம், மேகதாது pt web

மேகதாது அணை| கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடையில்லை.. தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு!

மேகதாது அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது..
Published on

மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஆய்வறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா வழங்க வேண்டும் என்றும், அதனை இறுதி செய்வதற்கு முன்பு தமிழகத்திடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி..

வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல், மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது என்றார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு வரும் 80 டிஎம்சி உபரி நீரை தடுக்கவே அணைகட்டப்படுவதாக வாதத்தில் கூறினார்.

அப்போது நீதிபதிகள், கர்நாடகா அரசு ஆரம்பகட்ட ஆய்வுஅறிக்கை தயாரிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

தமிழகம் தரப்பில், ஆரம்பகட்ட ஆய்வறிக்கை என்பதே அணைகட்டுவதற்கானது தான், அப்படிகட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆரம்பகட்டத்திலேயே அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேகதாது அணை
மேகதாது அணைpt web

அப்போது நீதிபதிகள்,தமிழகத்தின் ஆட்சேபனைகளை மத்தியஅரசிடம் அல்லது உரிய அமைப்பிடம் எடுத்து வைக்க வேண்டும் எனதெரிவித்தனர்.

மேகதாதுஅணை தொடர்பாக ஆரம்ப கட்ட ஆய்வுஅறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய நீர்ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். அதனைஇறுதி செய்வதற்கு முன்பாக தமிழகஅரசு, காவிரி நீர் மேலாண்மைஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுவாரியம் ஆகியவற்றிடம் மத்திய நீர்ஆணையம் கருத்துகளை கேட்டுமுடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு கடைபிடிக்கவில்லை என்றாலோ, தமிழகத்துக்கு உரிய நீரை பில்லி குண்டுலுவில் வழங்கவில்லை என்றாலோ அது நீதிமன்றஅவமதிப்பாகும் என கூறினர். மேகதாதுவில் அணைகட்டுவதற்கு புதுவை, கேரளமாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com