\
காவிரி நீர், உச்ச நீதிமன்றம்
காவிரி நீர், உச்ச நீதிமன்றம்file image

காவிரி நீர் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

காவிரி நீர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
Published on: 
Summary

காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தமிழ்நாடு அரசு 11 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க கோரிய நிலையில், கர்நாடகா நீர் இருப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தது.

காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை முடித்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

காவிரி நீர்
காவிரி நீர்pt web

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையில், கடும் வறட்சி நிலவுவதால் 11 டி.எம்.சி நிலுவை நீரை உடனடியாகத் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசு, அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் குடிநீர் தேவையைத் தவிர கூடுதல் நீரைத் திறக்க முடியாது எனத் தெரிவித்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வறட்சி கால நீர் பகிர்வு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

காவிரி நீர், உச்ச நீதிமன்றம்
கவலையளிக்கும் காவிரி வானிலை.. சம்பா பணிகள் எப்போது.. சாதக, பாதகம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com