\
அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் 2-ஆவது நாளாக நீடிக்கும் ஐ.டி. ரெய்டு

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் 2-ஆவது நாளாக நீடிக்கும் ஐ.டி. ரெய்டு

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் 2-ஆவது நாளாக நீடிக்கும் ஐ.டி. ரெய்டு
Published on

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர்களான, மதியழகன், தமிழ்செல்வன், பாலகிருஷ்ணன், சரவணன், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முதலாவதாக, சூரப்பநாயக்கன்சாவடியில் மதியழகன் என்பவரது வீட்டிலும், கடலூரில் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் சோதனை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்ச்செல்வன், மதியழகன் ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது. மற்ற நிர்வாகிகளின் வீடுகளில் தொடர்ந்து 2ஆவது நாளாக சோதனை நீடிக்கிறது.

சோதனைக்கு ஆளான அனைவரும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் ஆவர். கடலூரில் அதிமுக சார்பில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com