”எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய சிங்கம் அண்ணாமலை” - ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு குஷ்பு பதில்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் ஊழல் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டிக்கு, அதிமுகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் கருத்துக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பதிலளித்து வருகின்றனர். இதனால், அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் இடையே விரிசல் அதிகமாகியுள்ளதா என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, ”எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய சிங்கம் அண்ணாமலை. அவர் என்றைக்கும்தான் உண்மையைத்தான் பேசுவார். அரசியல் என்னவென்று தெரிந்துதான் பேசுவார். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருப்பதால் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஆதரவாக குஷ்பு பேசியது குறித்து இந்த வீடியோவில் காணவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com