\
சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு

சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு

சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு
Published on

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சென்னை மாநகர காவல்துறைக்கென பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் அனைத்து பிரிவு காவலர்களுக்கும் 30 சதவிகித தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கப்படும். இந்த அங்காடியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களிலிருந்து கார் வரை சலுகை விலையில் காவலர்கள் வாங்கிக்கொள்ளலாம் என ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் காவலர்களுக்கான மிகப்பெரிய பல்பொருள் அங்காடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com