இனி ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி - சுப்ரமணியன் சுவாமி கணிப்பு

இனி ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி - சுப்ரமணியன் சுவாமி கணிப்பு
இனி ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி - சுப்ரமணியன் சுவாமி கணிப்பு

தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார். இத்தகைய நிலையில்தான், வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அத்துடன், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என்றும் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Good that “will he or will he not” about Rajnikant joining politics has ended. The key battle will be probably between Rajnikanth and Sasikala. BJP will be in a dilemma</p>&mdash; Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/status/1334426098369613833?ref_src=twsrc%5Etfw">December 3, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், ரஜினி அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டரில், “ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விகள் முடிவுக்கு வந்தது; தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும்; பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com