சுனிதா புதிய தலைமுறை
தமிழ்நாடு
''நான் தான் ஜெயலலிதா மகள்''- கேரளப் பெண் பரபரப்பு!
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மிக விரிவான விவரங்களைக் கொடுத்துள்ளார்.
நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கேரளாவைச் சேர்ந்த 37 வயது சுனிதா என்ற பெண் ஒருவர், தன்னை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக டிஎன்ஏ சோதனைக்கும் தயார் என்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மிக விரிவான விவரங்களைக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சூழ்நிலை காரணமாக நான் ரகசியமாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டிஎன் ஏ பரிசோதனை செய்ததில் தான் ஜெயலலிதாவின் மகள் என தெரியவந்தது. அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை பார்ப்பேன். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று சுனிதா வலியுறுத்தியுள்ளார்.