விஜயகாந்த் அன்று சொன்ன அந்த வார்த்தை... நினைவுகூர்ந்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!

“எந்த பிரச்னையா இருந்தாலும் முதல் ஆளா வந்து நிப்பாரு கேப்டன்” - இயக்குநர் சுந்தர் சி
Sundar C
Sundar Cpt desk

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர் மத்தியில் பேசிய அவர், “நடிகர்களில் ஒரு மாமனிதர் என்றால் அது கேப்டன் அவர்களைதான் சொல்வேன். மத்தவங்களோட பிரச்னையை தீர்க்கக்கூட இவர் முன்னாடி வந்து நிற்பார். சினிமாவாகட்டும், பொது வாழ்க்கை ஆகட்டும்.... அந்த மாமனிதன் கேப்டன் எப்போதும் முன்னே இருப்பார்.

நானே சினிமாவுக்கு வந்த புதுசுல ஒரு இன்டர்வியூல நான் சொல்லாத சில வார்த்தை வந்துச்சு. அப்ப கேப்டன் என்னை கூப்பிட்டு ‘நீ வளர்ற பையன், இப்படி பேசக்கூடாது’ன்னு எனக்கு அறிவுரை சொன்னாரு. அதுபோல எந்த பிரச்னையா இருந்தாலும் முதல் ஆளா வந்து நிப்பாரு” என்றார் உருக்கமாக.

Sundar C
“இங்கு விடப்படுகிற ஒவ்வொரு கண்ணீரும் உள்மனதில் இருந்து வருவது” - குஷ்பூ கண்ணீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com