ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு சம்மன்..!

ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு சம்மன்..!

ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு சம்மன்..!
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி நடந்தது. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், அப்போதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

அனுமதியின்றி நடைபெற்ற தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர்மொய்தீன், திருநாவுக்கரசு கராத்தே தியாகராஜன் ஆகியோர் டிசம்பா் 26ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com