கோடை விடுமுறை | நீலகிரிக்கு சிறப்பு மலை ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
செய்தியாளர்: ஜான்சன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை இடையே தினமும், தலா நான்கு முறையும், உதகை மேட்டுப்பாளையம் இடையே தலா ஒரு முறையும் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் 28ம் தேதி தொடங்கி ஜூலை, 6ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில், உதகைக்கு பிற்பகல், 2:25 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல் 29ல் இருந்து, ஜூலை 7ம் தேதி வரை, சனி, திங்கட்கிழமைகளில், உதகையில் இருந்து காலை, 11:25 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது. இந்த ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை, முதல் வகுப்பு, 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு, 140 இருக்கைகளும் உள்ளன.
பயணிகளின் வசதிக்காக குன்னூரில் இருந்து உதகை வரை செல்லும் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.