\
சுட்டெரிக்க தொடங்கிய கோடை - தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்!

சுட்டெரிக்க தொடங்கிய கோடை - தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்!

சுட்டெரிக்க தொடங்கிய கோடை - தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்!
Published on: 

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது, தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது.

தமிழகத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவான  9 மாவட்டங்களில் விவரங்கள்:
கரூர் பரமத்தி - 105 டிகிரி
மதுரை விமான நிலையம் -104 டிகிரி
திருச்சி - 104 டிகிரி
ஈரோடு - 102 டிகிரி
வேலூர் - 101 டிகிரி
சேலம் - 101 டிகிரி
திருத்தணி - 101 டிகிரி
நாமக்கல் - 100 டிகிரி
தஞ்சை - 100 டிகிரி


சென்னையில் 100 டிகிரி வெப்பநிலையை நெருங்குகிறது வெயில். சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும்,
நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.



தமிழகத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com