யானைகள் ஜாக்கிரதை: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

யானைகள் ஜாக்கிரதை: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

யானைகள் ஜாக்கிரதை: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
Published on

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை அடுத்து ஊட்டியில் சுற்றுலா சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலா சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்கார மலைப்பாதை செல்லும் சாலையில் காட்டு யானைகள் வலம் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அந்த சாலையில் கோரைப் புற்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அதனை உண்பதற்காக யானைகள் படை எடுத்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com