\
கோடை வெயில்... சதம் அடித்த மாவட்டங்கள்

கோடை வெயில்... சதம் அடித்த மாவட்டங்கள்

கோடை வெயில்... சதம் அடித்த மாவட்டங்கள்
Published on: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி தஞ்சை, பாளையங்கோட்டை மதுரை ஆகிய இடங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது. இதேபோல் கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் குன்னூரில் தலா 75 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது. மே மாத இறுதி வரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என கூறியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com