கோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்

கோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்

கோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்
Published on

கோடைவிடுமுறையில் சென்னையை சுற்றிப்பார்க்க 2 மாதங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கபடவுள்ளது.

சென்னையில் கோடை விடுமுறைக்கு 2 மாதங்களுக்கு சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சுற்றுலா தளங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மாநக‌ரப் போக்குவரத்துக் கழகத்தால் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அண்ணாசதுக்கம் வழியாக 50 சிறப்புப்பேருந்துகளும், வண்டலூர் உ‌யிரியல் பூங்காவுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு 10 சிறப்பு பேருந்துகளும், விடுமுறை தினங்களில் கோவளம் கடற்கரைக்கு 3 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com