\
கோடை விழா: கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

கோடை விழா: கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

கோடை விழா: கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்
Published on

கொடைக்கானலில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கு பிரயண்ட் பூங்கா தயாராகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை பருவத்தில் கோடை விழாவும் அதன் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சியும் நடைபெறும். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடைவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே பூங்காவில் பல்லாயிரக்கணக்கான மலர் நாற்றுகள் நடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்கத் துவங்கி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதில், செவ்வந்தி, சூரிய காந்தி, சால்வியா, டைசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் மற்றும் ரோஜா பூக்கள் கொத்துக்கொத்தாக பூக்கத்துவங்கி, பூங்காவின் மலர் படுகைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

இதையடுத்து கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான நாளை சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com