\
சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சதமடித்த வெயில் !

சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சதமடித்த வெயில் !

சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சதமடித்த வெயில் !
Published on

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் 106.8, மீனம்பாக்கம் 105.2, தூத்துக்குடி 103.6, புதுவை 102.9, திருச்சி 102.5 கடலூர், திருத்தணி, மதுரை 102.2, அதிராம்பட்டினம் 101.4, நுங்கம்பாக்கம், நாகை 101.1, வேலூர் 100.08 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com