‌‌‌ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: ஆட்சியர் விளக்கம்

‌‌‌ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: ஆட்சியர் விளக்கம்
‌‌‌ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: ஆட்சியர் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லே‌‌சான கசிவு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகளுடனான ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசிவை சரி செய்வதற்கான நடவடிக்‌கைகள் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு வெளியாவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் ஆலையை ஆய்வு செய்ய துணை ஆட்சியர் பிராசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்வதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த பணிகள் ஒரே நாளில் முடிவடையும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டார். இதனால் எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பயப்படவும் தேவையில்லை எனவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com