தற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு

தற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு

தற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு

தற்கொலை என்பது நிரந்தர தீர்வல்ல, தற்காலிகத் தீர்வுதான், எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சென்ற ஆண்டு முதல் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய செயல்முறைகளுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விருதுகள் வழங்கினார். 

விழாவில் பேசிய தமிழிசை, “இந்த காலத்தில் விவேகம் கூட தேவையில்லை. வேகம் தான் தேவை. நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாட்களையும் வீணாக்க போகிறீர்களா, இல்லை படிக்க போகிறார்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் அன்று ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னால் படிப்பது நன்மை கிடையாது. எனவே என்னுடைய அறிவுரை என்னவென்றால் மாணவர்களுக்கு அன்றன்று பாடங்களை அன்றே படிக்க வேண்டும்.

உங்களை இந்த பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்புவதற்கு உங்கள் தந்தை எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தயவு செய்து பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ அதை சாதிக்க வேண்டுமேயொழிய, இடையில் வரும் சவால்களை எதிர் கொள்ள  முடியாமல் தற்கொலை செய்ய கூடாது. இனி தமிழகத்தில் எந்த தற்கொலையும் நடைபெறக் கூடாது என்பது என் வேண்டுகோள். இந்த கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது. சவால்களைத் தாண்டி முன்னேறிய பெண் என்பதை முன்வைத்து நான் பேசுகிறேன்” என்று கல்லூரி மாணவர்களிடையே பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com