ஆசிரியைகள் அடித்ததுதான் தற்கொலைக்குக் காரணம்: உயிரிழந்த மாணவிகளின் தோழிகள்!

ஆசிரியைகள் அடித்ததுதான் தற்கொலைக்குக் காரணம்: உயிரிழந்த மாணவிகளின் தோழிகள்!

ஆசிரியைகள் அடித்ததுதான் தற்கொலைக்குக் காரணம்: உயிரிழந்த மாணவிகளின் தோழிகள்!
Published on

அரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியைகள் அடித்ததும் திட்டியதும்தான் காரணம் என உயிரிழந்த மாணவிகளின் மாணவிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவிகளின் தோழி அபிநயா பேசும் போது, வேறொரு மாணவி பள்ளிக்கு எடுத்தவந்த செல்போனை, ரேவதியும், தீபாவும் கொண்டு வந்தார்கள் என்று கூறி பள்ளியில் பிரேயரின் போது ஆசிரியை மாணவிகளை அடித்தார். அதனாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறினார்.

மாணவிகளின் தோழி டில்லிராணி கூறும் போது, எங்களையே எதிர்த்து பேசுகிறாயா, நீ அவ்வளவு பெரிய ஆளா என்று ஆசிரியை அவர்களிடம் கேட்டார். அதற்கு மனிஷாவும், சங்கரியும் நாங்கள் எதிர்த்துப் பேசவில்லை என்று கூறினர். பனப்பாக்கம் காலனி பசங்க என்று ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள் என்று தலைமை ஆசிரியை கேட்டதற்கு, உயிரியல் ஆசிரியையும், லில்லி ஆசிரியையும்தான் எங்களை இவ்வாறு கேட்கின்றனர் என்று மனிஷாவும், சங்கரியும் கூறினர் என்றார்.

மாணவிகள் தற்கொலை தொடர்பாக தலைமை‌ ஆசிரியை ரமா, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஷ்வரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவிகளுடன் பயின்ற மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்திய பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை முடிந்த மாணவிகளின் உடலைப் பெற மறுத்து பெற்றோர்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை தங்களுக்கு தெரியாமல் தொடங்கியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் ஆசிரியர்கள் மீது துறை ரீ‌தியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், உரிய இழப்பீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்ததின் பேரில் நான்கு மாணவிகளின் உ‌டல்களை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். 


மாணவிகள் உடல்கள் கொண்டு செல்லும் சாலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து மாணவிகளின் உடல் அஞ்சலிக்காக அவர்களது இல்லங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com