\
வங்கியில் திடீரென ஒலித்த அபாயமணி - போலீஸ் தீவிர விசாரணை

வங்கியில் திடீரென ஒலித்த அபாயமணி - போலீஸ் தீவிர விசாரணை

வங்கியில் திடீரென ஒலித்த அபாயமணி - போலீஸ் தீவிர விசாரணை
Published on

நாமக்கல்லிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் திடீரென அபாய மணி ஒலித்ததால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று பணி முடிந்த பின்பு, வங்கியை மூடிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், மூடப்பட்டிருந்த வங்கியிலிருந்து இன்று காலை திடீரென அபாய ஒலி ஒலித்துள்ளது. அதனையடுத்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளை முயற்சியில் யாரேனும் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com