தமிழ்நாடு
வாணியம்பாடி அருகே தோன்றிய திடீர் நீர் வீழ்ச்சி
வாணியம்பாடி அருகே தோன்றிய திடீர் நீர் வீழ்ச்சி
தொடர் மழை காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான வீரண்ணமலைப்பகுதியில், புதிய நீர்வீழ்ச்சி ஒன்று உருவாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வீரண்ணமலைப்பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால், வாணியம்பாடி, தும்பேரி, வெலதிகமாணிபெண்டா, ஆர்மாணிபெண்டா வழியாக செல்ல வேண்டும். கடந்த சிலநாட்களாக பெய்த கனமழை காரணமாக வீரண்ணமலைப்பகுதியில், தற்போது புதிய நீர்வீழ்ச்சி ஒன்று உருவாகி உள்ளது. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து வெள்ளிக்கம்பிகள் போல தண்ணீர் கொட்டுவதை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும், இந்த நீரானது வீரண்ணமலையிலிருந்து, ஆர்மாணிபெண்டா, தேவராஜபுரம், வெலதிகமாணிபெண்டா, அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வந்து, பாலாற்றில் கலக்கத்தொடங்கியுள்ளது.