தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்புpt desk
தமிழ்நாடு
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு - மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் உடல் நலக்குறைவால் தாயகம் திரும்பிய போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் மலேசியாவில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்பட்டது.
ஆதரவின்றி நிற்கும் மாணவிpt desk
இதையடுத்து நேற்று மலேசியா விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே ராசாத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தபடியே உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே தந்தை உயிரிழந்த நிலையில், தற்போது தாயும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தால் ஆதரவின்றி நிற்கும் 4-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட கோரிக்கையும் எழுந்துள்ளது.