காயத்துடன் தப்பிய இளைஞர்
காயத்துடன் தப்பிய இளைஞர் pt desk

சென்னை: திடீரென வெடித்த மின்மாற்றி... அறுந்து விழுந்து மின்சார கம்பி; காயத்துடன் உயிர்தப்பிய இளைஞர்!

தாம்பரம் அருகே மின்மாற்றி வெடித்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த இளைஞர் நல்வாய்ப்பாக காயத்துடன் உயிர் தப்பினார்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கத்தில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே இருந்த மின்மாற்றி நேற்று இரவு திடீரென வெடித்தது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது.

transformer
transformerfile

இதைக்கண்ட இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், வானத்தில் இருந்து கீழே குதித்ததால் நல்வாய்ப்பாக உயர்தப்பினார். இருப்பினும், அவரது கையில் மட்டும் காயம் ஏற்பட்டது.

காயத்துடன் தப்பிய இளைஞர்
பெங்களூருவில் கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்.. கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

இதைத் தொடர்ந்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்து மின் விநியோகத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com