திருச்செந்தூர் கோவிலில் அசைவ உணவு சமைக்க திடீர் தடை.. ‘மீன் சமைப்பது மரபுதான்’ என பக்தர்கள் கருத்து!

தாய் பராசக்தி கொடுத்த சக்திவேலை வீசி, சூரனை சம்ஹாரம் செய்து ஜெயந்திநாதராக வீற்றிருக்கிறார். இந்தப் பெயர்தான், செயந்திநாதர் என்று மருவி, இப்போது செந்தில் நாதராக நிலைத்திருக்கிறது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர்புதிய தலைமுறை

கோயில், திருவிழா, வழிபாடு என்றாலே, சிலிர்ப்பான அனுபவங்கள்தான். திருவிழாக் கூட்டத்தில் கரைந்து, பரவசத்தில் உருகுவது ஒரு இனிய அனுபவம். இப்படியான வழிபாட்டு முறையில், சில அம்சங்களுக்கு தடை என்றால், அப்போது ஏற்படும் உணர்வு, வேதனைதான்.

பொதுவாக, தென் மாவட்ட மக்களுக்கு, வங்கக்கடலை பற்றி சுட்டிக்காட்டினால், திருச்செந்தூர் கடல்தான் நினைவுக்கு வரும். திருச்செந்தூர் முருகன் என்றாலே, உருகி விடுவார்கள் அவர்கள். அந்த அளவுக்கு, திருச்செந்தூரும் திருச்செந்தூர் முருகனும், அவர்களின் மனதுக்கு அப்படி ஒரு நெருக்கம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா, பங்குனி உத்திரம், சூரசம்ஹார விழா, வைகாசி விசாகம் என ஆண்டு முழுவதுமே திருவிழாதான்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் முருகன் கடலோரத்தில் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பு.

தாய் பராசக்தி கொடுத்த சக்திவேலை வீசி, சூரனை சம்ஹாரம் செய்து இங்கு ஜெயந்திநாதராக வீற்றிருக்கிறார் முருகன். இந்தப் பெயர்தான், செயந்திநாதர் என்று மருவி, இப்போது செந்தில் நாதராக நிலைத்திருக்கிறது.

tpk-1

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாக கொண்டாட்டத்திற்காக, அங்கு திரண்டபடி இருக்கிறார்கள் பக்தர்கள். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருக்கிறார்கள்.

"கோயிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா" என்ற பாடல் வரிகளுக்கேற்ப காணப்படுகிறது திருச்செந்தூர் கடற்கரை.

இப்படி திரண்டிருப்பவர்கள், முருகனின் திருமுகத்தை தரிசித்துவிட்டு, விசாகத்துக்கு மறுநாள், கோயில் அருகே உள்ள மண்டபங்களில், மீன் சமைத்து சாப்பிட்டு, விரதத்தை முடிப்பது மரபு. இது காலங்காலமாக அங்கு தொடர்கிறது. ஆனால், இந்த ஆண்டு, அசைவ உணவு வகைகளை சமைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோயில் இணை ஆணையர் கார்த்திக். இந்த அறிவிப்பால் முருக பக்தர்கள் மத்தியில் வேதனையும் எதிர்ப்பும் குழப்பமும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com