நாளை யுபிஎஸ்சி தேர்வு...  தேர்வர்களுக்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு

நாளை யுபிஎஸ்சி தேர்வு... தேர்வர்களுக்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு

நாளை யுபிஎஸ்சி தேர்வு... தேர்வர்களுக்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு
Published on

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வார நாட்களை விட, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 30 சதவீதம் மின்சார ரயில்கள் குறைத்து இயக்குவது வழக்கமாகும். ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் மூலம் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல்- சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி ஆகிய ரயில்கள் வாரநாட்கள் அட்டவணையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com