\
கொரோனாவுக்கு முன்பிருந்தது போன்று புறநகர் ரயில்சேவை

கொரோனாவுக்கு முன்பிருந்தது போன்று புறநகர் ரயில்சேவை

கொரோனாவுக்கு முன்பிருந்தது போன்று புறநகர் ரயில்சேவை
Published on

சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவை, கொரோனா காலத்துக்கு முன்பிருந்தது போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரயில்வே அட்டவணையை வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, வார நாட்களில் சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் 254 சேவைகளும், சென்னை - கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 84 சேவைகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல, சென்னை கடற்கரை வேளச்சேரி மார்கத்தில் 80 சேவைகளும், கடற்கரை செங்கல்பட்டு மார்கத்தில் 240 சேவைகளும் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com