அம்மா ஸ்கூட்டர் திட்டம்: விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

அம்மா ஸ்கூட்டர் திட்டம்: விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்
அம்மா ஸ்கூட்டர் திட்டம்:  விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

தமிழக அரசு மானிய விலையில் வழங்கும் பெண்களுக்கான இரு சக்கர வாகன திட்டத்திற்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெண்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.இதற்காக கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. 


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com