\
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கிறார் சு.சுவாமி

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கிறார் சு.சுவாமி

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கிறார் சு.சுவாமி
Published on

சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் கடந்த சில தினங்களாகவே அரசியல் களம் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என கூறியிருந்தார். சசிகலா பதவியேற்க தாமதமாவது அரசியல் சட்டத்துக்கு புறம்பாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள அவர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆளுநர் தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com