\
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு
Published on

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட, 224 ஏக்‌கர் பரப்பளவிலான நிலத்தின் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தோப்பூரில் அமைய உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 224 ஏக்கர் பரப்பளவிலான நிலம், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது. அதுதொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில், மத்திய குழு சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

இதன்பின், எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 224 புள்ளி 42 ஏக்கர் பரப்பளவிலான இடம் அளவீடு செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின், மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com