சுபஸ்ரீ மரணம் : லாரி ஓட்டுநர் கைது - பேனர் வைத்தவர் ?

சுபஸ்ரீ மரணம் : லாரி ஓட்டுநர் கைது - பேனர் வைத்தவர் ?

சுபஸ்ரீ மரணம் : லாரி ஓட்டுநர் கைது - பேனர் வைத்தவர் ?
Published on

பேனர் விழுந்த விபத்தால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக நிர்வாகி ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனரால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை(25) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பேனர் வைத்தவர் கைது செய்யப்பட்டாரா ? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேள்விகள் எழும்பியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com