பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.
துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, நிலை தடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது. இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் பலத்த காயம்.
அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார். இந்நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.