சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து, தண்ணீர் லாரி ஏறிய விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களிடம் உதவி ஆய்வாளர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரிடம் பேனர் வைக்க அனுமதி கொடுத்தது யார் என பள்ளிக்கரணை உதவி ஆய்வாளர் பாஸ்கரன் கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர் உரிய பதில் தராததால் ஆத்திமடைந்த பாஸ்கரன் அனைத்து ஆதாரங்களையும் காவல் ஆணையருக்கு அனுப்பிவிடுவேன் எனக்கூறுகிறார்.
பாஸ்கர்: அனுமதி கொடுத்தது யார்?" யாருமே போன எடுக்க மாட்டேங்குறீங்க..?
பாஸ்கர்: முதல்ல மாறன்னு சொன்ன, அப்புறம் அவர் இல்லனு சொல்ற
பாஸ்கர்: மதன் என்னடான்னா நா இல்லன்னு சொல்றாரு
பாஸ்கர்: ஆனா நீ மதனுக்கு தெரியும்ணு சொல்ற..
பாஸ்கர்: என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்களா ஒத்துக்கிட்டா ஒ.கே.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்: சரி சார்
பாஸ்கர்: ஜெயகோபால் உங்களுக்கு ஆளுக்கு ₨1,000 கொடுத்தேன்னு சொல்றாரு
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்: நா நேர்ல வர்றேன் சார்.
பாஸ்கர்: எல்லாத்தையும் சேத்து கமிஷனருக்கு ரிப்போர்ட் அனுப்பிடுவேன், எல்லா ஆதாரமும் இருக்கு
என முடியும் வகையில் அந்த ஆடியோ அமைந்துள்ளது.