உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை 

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை 
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை 

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க அனுமதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னையில் இளம் பெண் சுபஸ்ரீ கடந்த மாதம் பேனர் விழுந்து, இறந்த நிலையில் ‌தனது மகளின் மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். 

மேலும் சட்டவிரோத பேனர் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் சுபஸ்ரீயின் தந்தை குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு விசாரணையின்போது ஜெயகோபால் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் விசாரணைக்கு பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. 

இதைக் கேட்ட நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிக்கையை எப்படி பரிசீலிக்க முடியும் என கேள்வியெழுப்பினர். இடைக்கால நிவாரணத்திற்கான உத்தரவு நகல் வந்தபின், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகியுள்ளது எனவும், இதேபோல் மற்ற உலகத் தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். சுபஸ்ரீ இறந்ததற்கு காற்றின் மீதுதான் வழக்கு தொடர வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் பேசியதற்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தனி நீதிபதியாக இருந்தபோது உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தேன், ஆனால் சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்து அதனை மட்டும் நீக்கிக்கொண்டு விட்டதாகவும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க அனுமதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், சேஷசாயி அமர்விற்கு பரிந்துரை செய்துள்ளனர். சுபஸ்ரீ தந்தை மனுவை, டிராஃபிக் ராமசாமி வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com