பேனர் விழுந்து சுபஸ்ரீ  உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது
Published on

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். எனினும் ஜெயகோபால் கடந்த 14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் 14 நாட்களாக தலைமறைவாக இந்த அதிமுக பிரமுகர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கிருஷ்ணகிரியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com