அமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்

அமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்
அமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

’இந்தி தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 ’’இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும்.

இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

அமித் ஷாவின் இந்தக் கருத்து பற்றி சுப வீரபாண்டியன் கூறும்போது, ’இது எதிர்பார்த்த ஒன்றுதான். இவ்வளவு விரைவாக இதை கொண்டு வருவார்கள் என்று நினைக்கவில்லை. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது, ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கு எதிரானது. இதன் மூலம் ஒற்றுமையாக இருக்கிற இந்தியாவை அவர்கள் உடைக்கிறார்கள். மற்ற மொழிகள் பேசும் மக்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்’ என்றார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com