Police SI
Police SIpt desk

சென்னை: மின்வாரிய அலுவலகம் முற்றுகை - புதிய தலைமுறை செய்தியாளரிடம் அத்துமீறிய எஸ்.ஐ

சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் வடிந்த நிலையிலும் மின்சாரம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மீது உதவி ஆய்வாளர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார்.
Published on

சென்னை பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகர் பகுதியில் புயல் மழை காரணமாக வெள்ளம் தேங்கியது. பல இடங்களில் வெள்ளம் வடிந்த நிலையில், சில இடங்களில் வெள்ளம் தேங்கியிருந்தது. மழை நீர் வடிந்தும் மின்சார விநியோகம் வழங்கவில்லை எனக்கூறி அந்தப் பகுதி பொதுமக்கள் பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Police
Policept desk

மின்வாரிய அலுவலர்கள் இரண்டு மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதாகக் கூறியும் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் சாந்தகுமாரிடம் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து மின்வாரிய அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்றார்.

உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தியின் அத்துமீறல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில், அசோக சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுப்பதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதியளித்தார். இதனிடையே உதவிஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி தமது செயலுக்காக செய்தியாளர் சாந்தகுமாரிடம் வருத்தம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com