பொங்கலன்று SBI வங்கி தேர்வு... தேதியை மாற்றக்கோரி தொடரும் போராட்டம்! லேட்டஸ்ட் அப்டேட்

பொங்கலன்று SBI வங்கி தேர்வு... தேதியை மாற்றக்கோரி தொடரும் போராட்டம்! லேட்டஸ்ட் அப்டேட்
பொங்கலன்று SBI வங்கி தேர்வு... தேதியை மாற்றக்கோரி தொடரும் போராட்டம்! லேட்டஸ்ட் அப்டேட்

பொங்கலன்று வங்கித்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். 

இதுகுறித்து சு.வெங்கடேஷன் கூறுகையில், “ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என கடிதம் எழுதிய நிலையில் இன்று(13-01-2023) மாலை 5.30 மணி வரை பதில் இல்லை. 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் மாலை இந்தியா முழுவதும் தேர்வு நடைபெறுவதால் ஒத்தி வைக்க முடியாது என்ற பதில் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இது ஏற்றுகொள்ள முடியாது.

இந்த தேர்வை 2 ஆயிரம் நபர்கள் எழுதுவார்கள் என தகவல் வந்தது ஆனால் உண்மையில் 13 ஆயிரம் நபர்கள் தமிழகத்தில் இருந்து எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 13 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிப்பு அடையும். பொங்கல் பண்டிகை குறித்து தெரிந்தும் நிதி அமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டின் கலாசாரத்தை மதிக்காமல் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

திருமாவளவன் பேட்டி:

"நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம், நிதி அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் எந்த ஒரு பதிலும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல மணி நேரமாக நிதி அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார். அவருக்கும் தற்போது வரை முதல்வரின் அழைப்புக்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஒரு முதல்வரே தொடர்பு கொண்டாலும் அவரிடம் தற்போது வரை பேச முடியாத சூழல் உள்ளது.

13 ஆயிரம் மாணவர்கள் மட்டும் இல்லாமல்,இந்த பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபட வேண்டும் அவர்கள் அனைவரும் இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர். பாஜக தமிழர்களின் கலாச்சாரத்தை மதிக்காமல் வஞ்சிக்கிறது.முதலமைச்சர் இன்று இரவுக்குள் நிதி அமைச்சரை எப்படியாவது தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு வீடு திரும்புங்கள் நான் நிதி அமைச்சரை தொடர்பு கொண்டு வலியுறுத்துவேன் என முதல்வர் கூறியுள்ளார் எனவே தற்காலிமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் பேட்டி:

ஏற்கனவே தேர்வு ஒத்தி வைக்க வேண்டும் என கடிதம் எழுதிய நிலையில் இன்று மாலை 5.30 மணி வரை பதில் இல்லை. 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் மாலை இந்தியா முழுவதும் தேர்வு நடைபெறுவதால் ஒத்தி வைக்க முடியாது என்ற பதில் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது இது ஏற்றுகொள்ள முடியாது.

இந்த தேர்வை 2 ஆயிரம் நபர்கள் எழுதுவார்கள் என தகவல் வந்தது ஆனால் உண்மையில் 13 ஆயிரம் நபர்கள் தமிழகத்தில் இருந்து எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 13 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிப்பு அடையும். பொங்கல் பண்டிகை குறித்து தெரிந்தும் நிதி அமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com