பள்ளிக்கூடம் திறந்தாச்சு... ஆனால் இலவச பஸ் பாஸ்தான் வரல...

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... ஆனால் இலவச பஸ் பாஸ்தான் வரல...
பள்ளிக்கூடம் திறந்தாச்சு... ஆனால் இலவச பஸ் பாஸ்தான் வரல...

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இன்னும் முழுமையாக வந்துசேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக பஸ் பாஸ் வந்துசேரவில்லை என்பதால் பல மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளுக்கு முழுக் கட்டணச் சலுகையுடன் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையுடன் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனாலும் முழுமையாக பஸ் பாஸ் வழங்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறது. நடத்துநர்கள், சீருடை மற்றும் ஐடி கார்டுகளை கட்டாயமாக அணிந்து வர மாணவர்களை அறிவுறுத்துவதாகவும், சில நேரங்களில் பஸ் டிக்கெட் எடுக்க மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேப்பர் பஸ் பாஸிற்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் அதற்கான ஒப்பந்தப் பணி கால தாமதத்தால், கடந்த ஆண்டு பேப்பர் பஸ் பாஸே வழங்கப்பட்டது.

இதனிடையே மாணவர்களின் கடந்த ஆண்டு பஸ் பாஸை இந்த ஆண்டும் ஏற்றுக்கொள்ள அனைத்து நடத்துநர்களுக்கும் கடந்த மே 25-ஆம் தேதி மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியது. இருப்பினும் புது பஸ் பாஸ் கிடைக்காத காரணத்தினால் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com